அட்சய ஸ்வர்ணம் சிறு சேமிப்பு திட்டம
திட்ட விதிமுறைகள் :இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பன்னிரெண்டு (12) மாதங்கள் முழுமையாக செலுத்த வேண்டும்.
பிரதி மாதம் 12-ம் தேதி தவனை செலுத்த கடைசி நாள் ஆகும்.
திட்ட முடிவில் சேமிப்பு தொகை + ஒரு மாத தவணை (1) போனஸ் சேர்த்து அன்றைய நிலவரப்படி தங்க நகைகள், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் மட்டுமே வழங்கப்படும்.
தவனைத் தொகை மாதம் ஒரு முறை மட்டுமே கட்ட இயலும்.
உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு (1) சிறப்புப் பரிசுப்பொருள் அவர்கள் தவனைத் தொகைக்கு ஏற்ப உண்டு.
பணம் சரிவர கட்டாதவர்கள் கட்டிய தொகையில் சிறப்பு பரிசு தொகை கழித்து மீதித் தொகைக்கு தங்க நகைகள் மட்டுமே வழங்கப்படும். இதற்கு போனஸ் வழங்க இயலாது.
பாஸ் புக் தொலைந்துவிட்டால் நிர்வாகத்திற்கு உடனே தெரியபடுத்தவும், இல்லையெனில் அதனால் ஏற்படும் தவறுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
அனைத்து நகைகளுக்கும் 'GST வரி பொருந்தும்'
தங்க நாணயமாகவோ அல்லது ரொக்கமாகவோ வழங்க இயலாது.
இதில் குறிப்பிட்டுள்ள சலுகைகள் தவிர வேறு சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது. இத்திட்டம் புதிய சட்ட விதிமுறைகளுக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது,
இத்திட்டத்தில் ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தால் எடுக்கும் முடிவே இறுதியானது.