ஸ்ரீநிதி தங்கநகை சிறுசேமிப்புத் திட்டம்
திட்ட விதிமுறைகள் :மாதம் ரூ.500/- வீதம் 18 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.
பிரதி மாதம் 12ம் தேதி தவணை செலுத்த கடைசி நாள் ஆகும். தவணை செலுத்தாதவர்கள் பரிசுத்தேர்வில் பங்குகொள்ள இயலாது.
சிறப்புப் பரிசு : 1வது மாதம் தவணை செலுத்திய அனைவருக்கும் எவர்சில்வர் தூக்கு பரிசாக வழங்கப்படும்.
6வது மாதம் தவணை செலுத்தியவருக்கு எவர்சில்வர் ஃபிரைபான் பரிசாக வழங்கப்படும்.
திட்ட முடிவில் போனஸ் ரூ.500/-ம், சேமிப்புத் தொகை ரூ.9,000/-ம் சேர்த்து ரூ.9,500/- க்கு அன்றைய விலை நிலவரப்படி தங்க நகைகள் வழங்கப்படும்.
தங்க நாணயமாகவோ அல்லது ரொக்கமாகவோ வழங்க இயலாது.
எந்த பரிசுத்தேர்வில் பரிசு விழுந்தாலும் அப்பரிசினை பெற்று கொண்டு, தொடர்ந்து பணம் செலுத்தி மற்ற எல்லா பரிசுத்தேர்வுகளிலும் பங்கேற்று திட்ட முடிவில் சேமிப்பை போனசுடனும் தங்க நகைளாக திரும்பப்பெறலாம்.
4வது பரிசு ஒவ்வொரு மாதமும் 100 உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். 4வது பரிசிற்கு ஒரு முறை தேர்வு செய்யப்பட்டவர்கள் பிற மாதங்களின் 4வது பரிசுத்தேர்வுகளில் மீண்டும் கலந்து கொள்ள முடியாது. ஆனால் மற்ற பரிசுகளுக்கு உண்டான பரிசுத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பரிசு பொருள், பரிசுத் தொகையினை காட்டிலும் கூடுதலாக இருப்பின் கூடுதல் தொகை மட்டும் பரிசு விழுந்தவரிடம் வசூலிக்கப்படும்.
பிரதி மாத பரிசுத்தேர்வுகள் 14ம் தேதி மாலை சரியாக 6.15 மணிக்கு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.
பரிசு விழுந்த உறுப்பினர்க்கு பரிசுப் பொருள் அல்லது தங்க நகைகள் மட்டுமே தரப்படும். உறுப்பினர்களிடமிருந்து விடுபட்ட தவணைகளை ஒருசேர வசூலிக்கப்படமாட்டாது.
தவணைத்தொகை நிலுவையில் இருப்பின் அதிகபட்சம் இருமாத தவணைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஒரே முறை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
தொடர்ந்து மூன்று மாதம் தவணை செலுத்தாத உறுப்பினர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்பட்டு அந்த சீட்டிக்கு வேறு உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். பணம் சரிவர கட்டாதவர்கள் கட்டிய தொகையில் சிறப்பு பரிசு + ரூ.300/- கழித்து மீதித் தொகைக்கு தங்க நகைகள் மட்டுமே வழங்கப்படும்.
பரிசுப்பொருளின் மதிப்பிற்கு TDS வரி செலுத்த வேண்டியது இருந்தால் பரிசு விழுந்த உறுப்பினரே அவ்வரியை செலுத்தி பரிசினை பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அப்பரிசுப்பொருளின் மதிப்பிலேயே அவ்வரிக்கு உண்டான தொகை பிடித்தம் செய்யப்படும்.
தங்கநகைகளுக்கு உறுப்பினர்களிடம் இருந்து GST வரி வசூலிக்கப்படும். பாஸ்புக் தொலைந்தால் ரூ.25/ செலுத்தி நகல் பாஸ்புக் பெற்று கொள்ளவும்.
முகவரி மாறினால் நிர்வாகத்திடம் உடனே தெரிவித்து பாஸ்புக்கில் மாற்றிக்கொள்ள வேண்டும்.
இத்திட்ட சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தினர் தீர்ப்பே இறுதியானது.
சட்ட விதிமுறைகள் கரூர் நகர எல்லைக்கு உட்பட்டது.